51வது அமெரிக்க மாநிலமாக மாறினால், இது இலவசம்; கனடாவிற்கு டிரம்ப் புதிய ஆஃபர்  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற ஒப்புக்கொண்டால், அமெரிக்காவின் வரவிருக்கும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக சேரலாம் என்று செவ்வாயன்று (மே 27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இல்லையெனில், இந்த திட்டத்தில் இணைவதற்கான நுழைவுச் செலவு 61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், விண்வெளி அடிப்படையிலான மற்றும் தரை அடிப்படையிலான ஏவுகணை இடைமறிப்பு திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 175 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு முயற்சியில் சேர கனடா மிகவும் ஆர்வமாக உள்ளது என்று டிரம்ப் கூறினார்.

You May Also Like

More From Author