புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த அல்லது வராத மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் மே 22 முதல் ஜூன் 4 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்தப் பள்ளிகளில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை நியமிக்கப்பட்ட ஆன்லைன் மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
