மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 3,000ஐ நெருங்கி வருகின்றன.
கேரளா தற்போது பாதிப்புகளின் அடிப்படையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளன.
கடந்த மே 26 அன்று, நாட்டில் 1,010 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நான்கு நாட்களுக்குள், அந்த எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்தது. கேரளாவில் மட்டும் 1,147 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மகாராஷ்டிரா 424, டெல்லி 294 மற்றும் குஜராத் 223 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் முறையே 148, 148 மற்றும் 116 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
