வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கும் அமெரிக்கா குறித்து சர்வதேச விமர்சனம்

 

சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பது குறித்த அமெரிக்க அரசின் புதிய கொள்கை, சர்வதேச சமூகத்தில் தொடர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச இணையப் பயன்பாட்டாளர்களிடம் சீ ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையம் மேற்கொண்ட பொது கருத்து கணிப்பில், கல்வி தாராளத்தை அமெரிக்கா கடுமையாக மீறியுள்ளது என்று 82.1 விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்தனர்.

வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள், மாணவர்களுக்கான விசா நேர்முக சந்திப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசு கட்டளையிட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச மாணவர்களின் சமூக ஊடகங்களைப் பரிசீலனை செய்யக் கூடும். இதற்கு 81.3 விழுக்காட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது, மாணவர்களின் தன்மறைப்பு நிலையை மீறி, சர்வதேச மாணவர்களின் மீதான தவறான எண்ணம் மற்றும் பாகுபாட்டை வெளிக்காட்டுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author