சீனாவின் தைவான் பிரதேசத்தின் துணைத் தலைவர் லாய் சிங்தே அமெரிக்காவில் பயண இடைத்தங்கல் மேற்கொண்ட பிறகு 18ஆம் நாள் தைவானுக்குத் திரும்பினார். அவர் அமெரிக்காவில் பயண இடைத்தங்கல் செய்வதற்கு, தைவான் மக்கள் மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்ற சீனர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
நீரிணை இருகரைகள், ஒரே சீனாவைச் சேர்ந்தவை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். இருகரைகளுக்கிடையில் அரசியல் சர்ச்சை உள்ள போதிலும், சீனாவின் தேசிய உரிமையும் பிரதேச ஒருப்பாடும் எப்போதுமே பிரிக்க முடியாதது.
கடந்த சில ஆண்டுகளில் தைவான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, நிறைய சவால்களைச் சந்தித்து வருகின்றது. மின்ஜின் கட்சியும் லாய் சிங்தேவும், பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், நிறைய அமெரிக்க ஆயுதங்களை வாங்கி வருகின்றனர்.
புள்ளிவிவரங்களின் படி, இரு ஆண்டுகளில் அமெரிக்கா தைவானுக்கு 400 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. நிறைய அமெரிக்க ஆயுதங்களை வாங்கியுள்ள தைவான், ஆபத்தில் சிக்கியுள்ளது.
லாய் சிங்தே பல வழிமுறைகளின் மூலம் தைவான் பொது மக்களின் நலனைப் பாதித்து தொந்தரவை ஏற்படுத்தி வருகிறார்.