உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில சட்டப்பேரவை இரு அவைகளின் உறுப்பினர்களுடன் இன்று ராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.
இதற்காக லக்னோவில் இருந்து சொகுசு பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மலர்களை தூவியும், உற்சாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் கோயிலுக்கு சென்ற அவர்கள் ராமரை தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சதீஷ் மஹானா, நான் இந்த இடத்திற்கு வந்தபோது, இங்கு ஒரு கட்டிடம் இருந்தது.
அந்த கட்டிடம் டிசம்பர் 6-ம் தேதி எங்கள் எதிரில் இடிக்கப்பட்டது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். துப்பாக்கி குண்டு வெடித்த நேரத்தில் நான் இங்கு வந்தேன். 1990 மேடை கட்டப்பட்ட நேரத்தில் நான் இங்கு வந்தேன். இன்று நான் கடவுளை நேரடியாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.