நெஞ்சுவலி காரணமாக ஜி.கே. மணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Estimated read time 0 min read

பா.ம.க கவுரவத் தலைவர் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.

சனிக்கிழமை மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூட்டத்திற்கு தைலாபுரம் தோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் இருந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை கல்வி கோவிலில் கட்டிடப் பணிகள் மீண்டும் துவங்க வேண்டும் என்று சொன்னார்கள். நேற்று காலை 5.30 மணிக்கு கட்டிடப் பணிக்கு சென்று துவக்கி வைத்து விட்டு சென்னை திரும்பினார். மீண்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் நேற்று மருத்துவமனைக்கு சென்றார்.

அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நேற்று இரவு முழுவதும் சிறிது நேரம் கூட தூங்காமல் உடல்நிலை சரியில்லாததால் இன்று 18.6.2025 மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பாமக எம்.எல்.ஏ நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜி.கே.மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author