மோந்தா புயல் ஆந்திராவில் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது.
மசூலிப்பட்டினம் தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர், காக்கிநாடா தெற்கே 110 கிலோமீட்டர், விசாகபட்டினம் தென்மேற்கே 220 கிலோமீட்டர் மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்மேற்கே 460 கிலோமீட்டர் தொலைவில் மோந்தா புயல் கரையை கடக்க தொடங்கியது.
90-100 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கிறது. முழுமையாக கரையை கடக்க 3-4 மணி நேரம் ஆகும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 90-110 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
