இனி Fastag ரீச்சார்ஜ் தொல்லை இல்லை…

Estimated read time 1 min read

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான இந்த சுங்கச்சாவடி பாஸ் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள பிரச்சனைக்கு இது தீர்வாக இருக்கும் எனவும், ரூ.3000 பாஸ் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் எளிதாக செல்ல முடியும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

toll

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இடையூறு இல்லாத நெடுஞ்சாலை பயணத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக , ஆகஸ்ட் 15, 2025 முதல் ₹3,000 விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்துகிறோம். செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை செல்லுபடியாகும் – எது முதலில் வருகிறதோ அதுவரை – இந்த பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

🔹இந்த வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை செயல்படுத்தும். செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பிரத்யேக இணைப்பு விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியிலும், NHAI மற்றும் MoRTH இன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும்.

🔹இந்தக் கொள்கை 60 கிமீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் ஒற்றை, மலிவு பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாக்குகிறது. காத்திருப்பு நேரங்களைக் குறைப்பதன் மூலமும், நெரிசலைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தகராறுகளைக் குறைப்பதன் மூலமும், மில்லியன் கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்குவதே இந்த வருடாந்திர பாஸ் திட்டத்தின் நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author