மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவிலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல் மாநிலமாகவும், உலகளவில் சீனாவுக்குப் பிறகு இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பகுதியாகவும் கேரளா உருவெடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் மாநில அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஒரு நபர் உணவு, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற மிக அடிப்படையான மனிதத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையை “கடுமையான வறுமை” என்று வரையறுக்கிறது உலக வங்கி.
‘கடுமையான வறுமையற்ற மாநிலம்’ என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்
