சீனாவின் உயர் தர வெளிநாட்டுத் திறப்பு ஜன்னல்: சிங்டாவ் மாநாடு

6ஆவது நாடு கடந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கான சிங்தாவ் மாநாடு 19ஆம் நாளன்று, சீனாவின் ஷாந்தோங் மாநிலத்தின் சிங்தாவ் நகரில் துவங்கியது.

இதில் 43 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 570 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  நாடு கடந்த நிறுவனங்களுக்குரிய கொள்கை விளக்கம், தொழில் துறையின் தொடர்பு, திட்டப்பணிகளின் ஒத்துழைப்புக்கான பரிமாற்ற மேடை ஆகியவற்றை வழங்குவது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 9.9 விழுக்காடு அதிகமாகும். 

2024ஆம் ஆண்டு இறுதி வரை சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுன் நிறுவப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 12 இலட்சத்து 39 ஆயிரமாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் தொகை 20 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author