ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 53ஆவது கூட்டத் தொடரின் போது, சீன மனித உரிமை ஆய்வு கழகம் ஜுலை 3ஆம் நாள் ஜெனீவாவில் சீன மனித உரிமைகளின் கருத்தாக்கம் மற்றும் நடைமுறை என்ற தலைப்பிலான கூட்டத்தை நடத்தியது. சீனாவின் மனித உரிமை பற்றிய கல்வி, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மகளிரின் உரிமை நலன்கள், சின்ஜியாங்கின் மொழி மற்றும் எழுத்துகள் பாதுகாப்பு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் புத்தரின் மறுபிறப்பு முறைமை மற்றும் சுதந்திர மத நம்பிக்கை, திபெத் பிரதேசத்துக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகளின் வரலாற்று உண்மைகள், சீனாவின் நவீனமயமாக்கம் மற்றும் மனித உரிமை துறையின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய நிபுணர்கள் விளக்கிக் கூறினர்.
சீன மனித உரிமை ஆய்வு கழகத்தின் துணை தலைமை செயலாளர் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தியபோது, உலக மனித உரிமை மேலாண்மை, மேலும் சமமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையுடன் கூடிய திசையில் வளர வேண்டும். பிளவுபட்ட உலகத்தில் ஒத்த கருத்துகளை உருவாக்கும் விதம், தப்பு எண்ணத்தை கைவிட்டு ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.