சம்பளம் மட்டும் போதாது! பல வழிகளில் வருமானம் ஈட்டும் 76% ஜென் ஜி இளைஞர்கள்! கிளியர் டாக்ஸ் அறிக்கை  

Estimated read time 1 min read

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஒரே ஒரு மாத சம்பளத்தை மட்டுமே நம்பியிராமல், பங்குச் சந்தை முதலீடுகள், ஃப்ரீலான்சிங், தொழில் மற்றும் பிற தொழில்கள் மூலம் பல வழிகளில் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கிளியர் டாக்ஸ் தளம் வெளியிட்டுள்ள 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஆரம்பக் கட்டத் தரவுகளின்படி, 25 வயதிற்குட்பட்ட ஜென் ஜி வருமான வரி செலுத்துவோரில் 76 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author