கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் குகேஷ் வெற்றி!

கனடாவில் நடைபெற்ற கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் வெற்றி பெற்றார்.

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று இன்று நடைபெற்றது. அப்போது சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், பிரான்சின் அலிரெஸா பிரூஸ்ஜாவை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவிடம் தோல்வி அடைந்தார்.

You May Also Like

More From Author