சீனத் தேசியப் பொருளாதாரத்தின் முன்னேற்றப் போக்கு

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் இப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, இவ்வாண்டின் முதல் 4 திங்கள்காலத்தில், மேலும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கையை சீனா பயனுள்ளதாக மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். உற்பத்தி மற்றும் வினியோகம் சமமான நிலையில் அதிகரித்துள்ளது. சந்தையின் விற்பனை தொடர்ந்து விரிவாகியுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசி ஒட்டுமொத்த அளவில் நிதானமாக உள்ளது. புதிய உந்து ஆற்றல் மேம்பட்டு, உயர் தரமுள்ள வளர்ச்சி சீராக முன்னேறி வருகிறது.

இவ்வாண்டின் முதல் 4 திங்கள்காலத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனத் தேசியளவில் சேவை துறையின் உற்பத்தி மதிப்பீட்டு எண், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முழுச் சமூகத்தின் நுகர்வோர் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 14.9 விழுக்காடு உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author