செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 இல் தனது வியத்தகு வெற்றிக்குப் பிறகு இந்திய செஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு, உலக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 இல், 19 வயதான பிரக்ஞானந்தாவின் வெற்றி, தரவரிசையில் அவரது புள்ளிகளை 2778.3 ஆக உயர்த்தியது.
இதன் மூலம் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் (2776.6) மற்றும் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த அர்ஜுன் எரிகைசி (2775.7) ஆகியோரை முந்தியுள்ளார்.
உலகளாவிய முதல் மூன்று இடங்களில் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் மாறாமல் உள்ளனர்.
இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா
