10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல் 15ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது.
சீனத் துணை தலைமை அமைச்சர் ஹேலிஃபெங், பிரெஞ்சு பொருளாதாரம், நிதி, தொழில்துறை மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் லோம்பார்ட் ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர்.
ஹேலிஃபெங் கூறுகையில், பிரான்ஸுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை நன்கு நடைமுறைப்படுத்தி சீன-பிரெஞ்சு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு புதிய உயிராற்றலை அளிப்பதோடு, சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பில் புதிய வளர்ச்சியைக் காணும் வகையில் கூட்டாக வழிநடத்தவும் சீனா விரும்புகிறது என்றார்.
சீனாவுடனான உறவின் மீது பிரான்ஸ் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. சீனாவுடன் இணைந்து உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்துக்கு ஆதரவளிக்க பிரான்ஸ் விரும்புகிறது என்று லோம்பார்ட் தெரிவித்தார்.
உரையாடலுக்குப் பின், அவர்கள் இருவரும் சீன-பிரெஞ்சு தொழில் முனைவோரின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினர்.