ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Estimated read time 0 min read

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது மழையின் அளவு சீரானதால் ஆற்றிற்கு வரும் நீரின் அளவு 78 ஆயிரம் கனஅடியில் இருந்து 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இருப்பினும் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

You May Also Like

More From Author