அண்மையில் சீனத் தைவான் பிரதேசத்தின் தலைவர் லெய்ஜிங்தெ, தைவான் அடையாளம் என்பதை பரப்புரை செய்துள்ளார். தவறுகள் நிறைந்திருந்த தைவான் சுதந்திர பிரிவினைவாத சக்தியின் பொய் கூற்றுகளை அழகுபடுத்துவதும் தைவான் மக்களைத் தவறாக வழிநடத்தி சர்வதேச கருத்துகளை ஏமாற்றுவதும் அவரின் உண்மை நோக்கமாகும்.
சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறையின் ரீதியில், தைவான் ஒரு நாடு என்ற லெய்ஜிங்தெவின் கூற்று நகைப்பிற்கிடமானதாக உள்ளது.
சீன மக்கள் குடியரசு சீனாவின் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அரசு என ஐ.நாவின் பெரும்பலான உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. தைவான் பிரதேசம் எந்த சர்வதேச அமைப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது, ஒரே சீனா என்ற கோட்பாட்டில் கையாளப்பட வேண்டும் என்பது உறுதி.
ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும் சர்வதேச உறவின் அடிப்படை கொள்கையாகவும் விளங்கியுள்ளதாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.