தைவான் பிரச்சினையில் சீனாவை மீறிய பிலிப்பைன்ஸ்

அண்மையில் பிலிப்பைன்ஸ் தலைவர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது கூறுகையில்,

தைவான் பிரச்சினையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் போர் இருந்தால், பிலிப்பைன்ஸ் இதை அலட்சியம் செய்யாது என்றார். ஒரே சீனாவில் ஊன்றி நிற்பது பற்றி பிலிப்பைன்ஸ் அளித்த உறுதியை இது மீறியது. சீன-பிலிப்பைன்ஸ் உறவு மற்றும் பிரதேச பாதுகாப்பு நிலைமைக்கு இது தீங்கு விளைவிக்கும்.

மகோஸ் அரசு பதவி ஏற்ற பிறகு, 2023 முதல் 2028 வரை தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டது. தைவான் பிலிப்பைன்ஸின் அருகில் அமைந்துள்ளது. 1 இலட்சத்து 50 ஆயிரம் பிலிப்பைன்ஸ் மக்கள் தைவானில் வாழ்கின்றனர். இதனால், தைவான் நீரிணையில் போர் ஏற்பட்டால், பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தைவான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரமாகும். பிலிப்பைன்ஸ் தெரிவித்த காரணங்கள், பிற நாட்டின் இறையாண்மையில் தலையீடு செய்யும் சாக்குப்போக்கு அல்ல.

சீனாவின் முக்கிய நலனாக கொண்ட தைவான் பிரச்சினை, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்குமிடையிலான பிரச்சினையாக இருக்காது. பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள், ஒரே சீனா என்ற கொள்கையையும் சீன-பிலிப்பைன்ஸ் கூட்டறிக்கையையும் பின்பற்றி, சீராக செயல்பட வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author