7ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்களது 22ஆவது கூட்டமும் சுற்றுலா அமைப்புத் தலைவர்களின் கூட்டமும் முறையே சீனாவின் சிங்தாவ் நகரில் நடைபெற்றது. தலைமை பதவி வகிக்கும் நாடான சீனா இவ்விரு கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பண்பாடு மற்றும் சுற்றுலா அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பிரதிநிதிகளும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலாளரும் அவற்றில் கலந்து கொண்டனர்.
மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பங்களிப்பை ஆற்றி மானிட பண்பாட்டியல் துறையின் உயர் தரமான ஒத்துழைப்புகளை முன்னேற்றும் வகையில், மேலதிக சிறந்த பண்பாடு மற்றும் சுற்றுலா திட்டப்பணிகளை உருவாக்கவுள்ளதாகப் பல்வேறு உறுப்பு நாடுகள் தெரிவித்தன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2025ஆம் ஆண்டு பண்பாட்டு பரிமாற்ற திட்டப்பணிப் பட்டியல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அன்றிரவு, ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளின் கலை திருவிழாவின் துவக்க விழா மற்றும் இளைஞர் பாடல் நிகழ்ச்சி நடந்தன. இதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பண்பாட்டு ஈர்ப்பாற்றலும் இளைஞர்களின் உயிராற்றலும் பெரிதும் வெளிக்காட்டப்பட்டுள்ளன.