அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் புதிய காலத்தில் மார்க்சிசத் தத்துவ ஆராய்ச்சி மற்றும் கட்டுமான திட்டப்பணிக்கு முக்கிய உத்தரவிட்டார்.
அவர் கூறுகையில், மார்க்சிசத் தத்துவ ஆராய்ச்சி மற்றும் கட்டுமான திட்டப்பணி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனை தத்துவக் கட்டுமானத்தின் அடிப்படை மற்றும் நெடுநோக்குத் திட்டப்பணியாகும். கடந்த 20 ஆண்டுகளில், ஏராளமான உயர்தர ஆராய்ச்சி சாதனைகளை இத்திட்டப்பணி வெளியிட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தாக்கத் தத்துவத்தைப் படிப்பது, ஆராய்வது, பிரச்சாரம் செய்வது, சித்தாந்தத் துறையில் மார்க்சிசத்தின் வழிகாட்டும் நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் அவை முக்கிய பங்காற்றியுள்ளன என்றார்.
புதிய காலத்தில் சீனத் தத்துவச் சமூக அறிவியல் தற்சார்பு அறிவுசார் அமைப்பு முறையை உருவாக்குவதை விரைவுபடுத்தி, உயர்தர தத்துவத் திறமைசாலிகளைப் பயிற்றுவித்து, சீனமயமாக்கப்பட்ட மற்றும் காலமயமாக்கப்பட்ட மார்க்சிசத்தை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.