சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய மூன்று நாட்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிடும் நிகழ்வு 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ், உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் மிர்சியோயேவ் ஆகியோர் காணொளி வழியாக இதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இந்த இருப்புப் பாதை திட்டப்பணி சீனா, மத்திய ஆசியாவுடன் தொடர்பு கொள்ளும் நெடுநோக்கு திட்டப்பணியாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் மூன்று நாடுகளும் கூட்டாகப் பங்கெடுப்பதற்குரிய சின்னமாகவும் திகழ்கின்றது எனத் தெரிவித்தார்.
இம்மூன்று நாடுகளுக்கிடையில் இந்த உடன்படிக்கை கையொப்பமிட்டப்படுவது, இத்திட்டப்பணிக்கு உறுதியான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளது. அதோடு, இத்திட்டப்பணி, திட்டத்திலிருந்து நடைமுறையாக்கத்துக்கு வருவதை இது காட்டியுள்ளது.
இந்த மூன்று நாடுகளும் கைகோர்த்துக்கொண்டு ஒத்துழைத்து, கூட்டு வளர்ச்சியை நோக்கி நடைபோடும் மன உறுதியையும் இது வெளிப்படுத்தியுள்ளதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.