போஆவ் ஆசிய மன்றக்கூட்டத்தில் சீன ஊடகக் குழுமத்தின் புதிய படைப்புகள் வெளியீட்டு விழா 27ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவின் தொன்மையான இலக்கிய படைப்புகள் மற்றும் புராணக் கதைகளை விளக்கிக் கூறும் புதிய படைப்புகள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைப்பை 26 நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், பயன்பாட்டு விதிமுறை முதலிய துறைகளில் சீன ஊடகக் குழுமத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் குறித்து சீன ஊடகக் குழுமத்தின் துணை தலைமை பதிப்பாசிரியர் ஃபான்யுன் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.