செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் 42 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 152.38 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 861 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டில், அவர் மூன்று சதங்கள் அடித்து, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் சில சிறந்த பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளார்.
இருப்பினும், ஷுப்மன் கில் அணிக்குத் திரும்பியதால், சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஷுப்மன் கில் தொடக்க வீரராகக் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.
இதற்கிடையே, மிடில் ஆர்டரிலும் கடும் போட்டி நிலவுவதால், சஞ்சு சாம்சன் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை
