சீன இணைய வலையமைப்பு தகவல் மையம் 21ஆம் நாள் சீனாவின் இணைய வலையமைப்பு வளர்ச்சி பற்றிய புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது.
இவ்வறிக்கையின்படி,14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீனாவின் இணைய கட்டமைப்புப் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பெறப்பட்டுள்ளன. ஜூன் மாதம் வரை, சீன இணையப் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 112கோடியே 30லட்சத்தைத் தாண்டியுள்ளது. இணையப் பயன்பாட்டு விகிதம் 79.7விழுக்காட்டை எட்டியதோடு, 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிகை 45லட்சத்து 50ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தொழில்துறையில் 2024ஆம் ஆண்டு சீன செயற்கை நுண்ணறிவுத் துறையின் மொத்த மதிப்பு 70000கோடி யுவானைத் தாண்டி பல ஆண்டுகளில் தொடர்ச்சியாக 20விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்த்தக்கது.