ஹோண்டுராஸ் அரசுத் தலைவரின் முதலாவது சீனப் பயணம் துவக்கம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, ஜுன் 9 முதல் 14ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளும் ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் இரீஸ் ஷியோமாரா காஸ்ட்ரோ சார்மியண்டொ 9ஆம் நாள் முற்பகல் ஷாங்காய் மாநகரை வந்தடைந்தார்.

அவரது முதலாவது சீனப் பயணத்தின்போது, இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடத்தி, சீன-ஹோண்டுராஸ் உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு கூட்டாக திட்டம் தீட்டி வழிக்காட்ட உள்ளனர்.


இதற்கு முன் ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ரெய்னா பேட்டியளிக்கையில், ஹோண்டுராஸும் சீனாவும் உயர்நிலை இருதரப்பு ஒத்துழைப்பை கூட்டாக முன்னேற்றுவதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க முடியும் என்று கூறியதோடு, இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சாதனைகளைப் பெற்று, இருநாட்டு மக்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

You May Also Like

More From Author