அமெரிக்க ஃபுளோரிட மாநிலத்தின் மியாமி டைமன்ட் நேவிகேட்டர் அகாடெமி, ஃபுளோரிட பல்கலைக்கழகம், மியாமி டேட் அகாடெமி ஆகியவற்றின் இளைஞர் கல்வி பரிமாற்ற குழுவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 7ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில்,
பொது மக்களும் இளைஞர்களும் சீன-அமெரிக்க உறவின் எதிர்காலமாகும். 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்களை அழைத்து சீனாவில் பயணம் மேற்கொள்ள செய்வது என்ற முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இதில் 40 ஆயிரத்துக்கும் மேலான அமெரிக்க இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். உண்மையான சீனாவை அறிந்துகொள்வதற்கான சாளரமாக இது விளங்கியது. இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவுக்கு பாலம் ஒன்றை அமைத்தது. நட்புறவு கொண்ட பரிமாற்றங்களை மேற்கொள்வது இரு நாட்டு மக்களின் விருப்பமாகும் என்பதை இது வெளிகாட்டியது. மேலதிகமான அமெரிக்க இளைஞர்கள், சீன-அமெரிக்க நட்புறவு இலட்சியத்தில் சேர்த்து, மனித பண்பாட்டு பரிமாற்றத்திற்கும் இருதரப்புறவு வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கத்தக்கது என்றார்.
