சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தில் எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு, எல்லை படைகளின் கட்டுமானம் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
உள் மங்கோலியாவிலுள்ள எல்லை படைவீரர்களுக்கு அவர் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், புதிய யுகத்தில் ராணுவ நெடுநோக்கு கோட்பாட்டைச் செயல்படுத்தி, படைகளின் பன்முக கட்டுமானத்தை வலுப்படுத்தி, சீன மக்கள் விடுதலைப்படை நிறுவப்பட்ட 100வது ஆண்டிற்கான இலக்கை நிறைவேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றார்.