சீனாவுக்கான 16 புதிய வெளிநாட்டுத் தூதர்களின் பதவி ஏற்பு கடிதங்களை ஷிச்சின்பிங் ஏற்றுக்கொள்தல்

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 25ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவுக்கான 16 தூதர்களின் பதவி ஏற்பு கடிதங்களை ஏற்றுக்கொண்டார்.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலாளர் எர்மெக்பாயேவைச் சந்தித்துரையாடினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல், ஒன்றை ஒன்று சமத்துவமாக அணுகுதல், ஒன்றுக்கொன்று நலன் அளித்து கூட்டு வெற்றி பெறுதல் என்ற அடிப்படையில், பன்னாடுகளுடன் இணைந்து பன்முகமான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களை வலுப்படுத்தச் சீனா விரும்புகிறது. உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் காணாத மாற்றங்களை எதிர்கொண்டு சர்வதேச நிலைமையில் பதற்றங்கள் ஏற்பட்டு வருகிற சூழலில், பன்னாடுகளுக்கு முன்னெப்போதையும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author