அண்மையில் ஏவப்படும் சீன சென்சௌ 19 விண்கலம்

சென்செள 19 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் அண்மையில் ஏவத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்விண்கலமும் லாங்மார்ச்-2எஃப் ஏவூர்தி தொகுதியும் ஏவுதல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சீனத் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அக்டோபர் 22ஆம் நாள் அறிவித்துள்ளது.

தற்போது, ஏவுதல் பகுதியிலுள்ள உபகரணங்கள் அனைத்தும் சீரான நிலையில் உள்ளன. இதனையடுத்து, ஏவுதலுக்கு முந்தைய பல்வேறு செயல்திறன் பரிசோதனை, கூட்டு சோதனை முதலிய பணிகள் நடைபெறும். அண்மையில் ஏவுதல் பணி நிறைவேற்றப்படும்.

You May Also Like

More From Author