மார்ச் 30ஆம் நாள் 13ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம் தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்றது.
சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ, தென் கொரியாவின் தொழில், வர்த்தகம் மற்றும் மூலவள அமைச்சர் அன் துக்-கியூன், ஜப்பான் பொருளாதாரத் தொழிற்துறையின் அமைச்சர் முட்டோ ரோங்ஜி ஆகியோர் இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
அப்போது வாங் வென்டாவோ கூறுகையில், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை தாராள வர்த்தகம் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைக் கூட்டாகப் பேணிகாத்து, ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை தொடர்ந்து முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்தின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கு வலிமையான உந்து ஆற்றலை ஊட்ட வேண்டும் என்றார்.
மேலும், அவர் கூறுகையில் உயர் தர வளர்ச்சியைச் சீனா உறுதியாக முன்னேற்றி, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்பைப் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகின்றது என்றார்.
இக்கூட்டத்துக்குப் பிறகு, 13ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டு செய்தி அறிக்கையை மூன்று நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறைகள் கூட்டாக வெளியிட்டன.