14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடர் முறையே 2025ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் மற்றும் மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளன.
சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் இவ்விரு கூட்டத்தொடர்களுக்கான பேட்டி காணும் பணியில் பங்கேற்க வரவேற்பதாக சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் அலுவலகமும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் அலுவலகமும் ஜனவரி 27ஆம் நாள் தெரிவித்துள்ளன.
மேலும், செய்தி மையம் பிப்ரவரி 27ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கும். தொர்புடைய தகவல்களை அறிய பின்வரும் இணையத்தளங்களில் தேடிபாருங்கள்:
http://www.cppcc.gov.cn