2024ஆம் ஆண்டில் சீன எண்ணியல் தொழிற்துறை வளர்ச்சி பொதுவாக நிதானமாக இருக்கின்றது. இத்தொழிற்துறையின் வருமானம், 35 லட்சம் கோடி யுவானாகும். இது 2023ஆம் ஆண்டை விட 5.5 விழுக்காடு அதிகமாகும். மொத்த லாபம் 2 இலட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 3.5 விழுக்காடு அதிகமாகும் என்று மார்ச் 17ஆம் நாள் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.
கணினி, தகவல் தொடர்பு மற்றும் பிற மின்னணு உபகரணங்கள் தயாரிப்புத் துறையின் கூடுதல் மதிப்பு 11.8% அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீன முழுவதும் ஒளியிழை வடக் கோடுகளின் மொத்த நீளம் 7 கோடியே 28 இலட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. நாடுமுழுவதும் 42 இலட்சத்து 51ஆயிரம் 5 ஜி அடிப்படை நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.