15வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், சீன பொருளாதாரம் மேம்படும் போக்கு மாறாது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு, எதிர் வரும் 5 ஆண்டுகளில், சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து அளித்த கணிப்பு, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகின் 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 47 ஆயிரம் மக்களிடம் பொது கருத்து கணிப்புகளை மேற்கொண்டது. அவற்றின் முடிவின்படி, கணிப்புக்குள்ளானர்கள் பெரும்பாலோர், சீன பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி போக்கிற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்நம்பிக்கை தெரிவித்தவர்கள், முறையே 74.7, 81.3 மற்றும் 81.9 விழுக்காடு வகித்தனர். இவ்வாண்டின் கருத்து கணிப்பில் 89.5 விழுக்காட்டினர்கள், சீன பொருளாதாரத்தின் வலிமையைப் பாராட்டினர் என்று தெரிய வந்துள்ளது.
படம்:VCG