சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘கோல்டன் டோம்’ எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய டிரம்ப், இந்த திட்டத்திற்கான இறுதி வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து, அமெரிக்க விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லீனை இந்த முயற்சியின் தலைவராக நியமித்ததாக தெரிவித்தார்.
“கோல்டன் டோம் எங்கள் தாயகத்தைப் பாதுகாக்கும்” என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருந்து கூறினார்.
175 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘கோல்டன் டோம்’ பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்
