உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றல்: சீனா

 

சீனாவின் வளர்ச்சி மன்றக் கூட்டத்தொடரின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் நிறைவடைந்தது. உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்துவதில் சீன அரசு உறுதியாக உள்ளது. சொந்த ஆற்றலையும் உள்ளார்ந்த ஆற்றலையும் தீவிரமாக்கி வருவதோடு, உலகின் வளர்ச்சிக்கு சீனா புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது என்று இதில் கலந்துகொண்ட பல்வேறு விருந்தினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் இது வரை, சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சீன அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது, எதிர்கால வளர்ச்சிக்கு மேலதிக பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று இதில் பங்கெடுத்த முக்கிய சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author