நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும்.
அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வர். அந்த பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்படும்.
அதற்காக மாநிலம் முழுவதும் சிறு சிறு கமிட்டிகள் உருவாகி அதற்கான ஏற்பாடுகளை செய்வர். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்காள அரசு ஒவ்வொரு கமிட்டிகளுக்கும் குறிப்பிட்ட தொகையை நிதியாக வழங்கி துர்க்கை பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி வருகிறது.
இதேபோன்று கடந்த ஆண்டு ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ₹85,000 வீதம் ரூபாய் 340 கோடி செலவழிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள துர்கா பூஜைக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒவ்வொரு துர்கா பூஜை கமிட்டிகளுக்கும் ₹ 1.10 லட்சம் வீதம் ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் 60 கோடி நவராத்திரி துர்கா பூஜை பண்டிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.