கர்நாடகாவில் பிரபல கார் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
கர்நாடகாவில், ஷிவமொக்கா பகுதியில் சங்கர மடம் சாலையில் உள்ள பிரபல கார் ஷோரூமில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் இரவு 10 மணியளவில் நடந்ததாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அதிகாலை 3 மணியளவில் தீ அணைக்கப்பட்டது, என்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 கார்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனத் முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்.