தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
குறிப்பாக நாளை (செப்டம்பர் 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு-மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களும் அவசர தேவையின்றி வெளியே செல்லாமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
