தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டமாக, ‘அன்புக்கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அவர்கள் உயர்கல்வி தொடரும் பொழுதும் தேவையான உதவிகளை அரசுத் தரப்பில் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், பெற்றோரை இழந்து தற்போது உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நம்பிக்கையும் நலனும் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த அறிவிப்பு சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அரசு தரப்பில் குழந்தைகள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் முக்கியமான ஒரு முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
