அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நீக்கங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பாணியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோர் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார். இதன் மூலம், உள்கட்சி ஒற்றுமையை காக்கும் வகையில் கட்சியில் ஒழுக்கம் வலுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சி. பாஸ்கர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்சியின் அடிப்படை நெறிமுறைகளுக்கு இணங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக உள்கட்டமைப்பில் பரபரப்பு நிலவுகிறது.