இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) உள்வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன.
கடந்த ஆறு நாட்களில் கண்ட தொடர்ச்சியான ஏற்றத்திற்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபப் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 81,393 என்ற ஒரு நாள் குறைந்தபட்ச அளவை எட்டியது. அதேசமயம் நிஃப்டி 50 குறியீடு 24,893 ஆக சரிந்தது.
லைவ் மின்ட் அறிக்கையின்படி, சந்தையின் இந்த சரிவுக்கு பல காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலாவதாக, தொடர்ச்சியான ஆறு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு லாபப் பதிவுகள் அதிகமாக இருந்தது. இந்த காலத்தில் சென்செக்ஸ் சுமார் 1,800 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
ஆறு நாட்கள் வளர்ச்சிக்குப் பிறகு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
