ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.