2025 எஃப்ஏ22 என்ற மிகப்பெரிய சிறுகோள், செப்டம்பர் 18, 2025 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளது.
இது, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சிறுகோளை, நாசாவின் புவிக்கு அருகில் உள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம் (CNEOS) மற்றும் ஜெட் உந்துவிசை ஆய்வகம் (JPL) ஆகியவை கண்காணித்து வருகின்றன. இந்தச் சிறுகோளின் அளவு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விட்டம் 120 முதல் 280 மீட்டர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 அன்று பூமியை நெருங்கி வரும் மிகப்பெரிய சிறுகோள்; நாசா கண்காணிப்பு
