எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை  

Estimated read time 0 min read

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.
கட்சியின் முன்னோடிகளான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்களையும், திமுக தொடங்கப்பட்ட நாளையும் நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விழாவைக் கட்சித் தொண்டர்கள் கொள்கைப் பட்டாளமாக இருந்து பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
“கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக.
நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்” என்று அவர் கூறினார்.

You May Also Like

More From Author