உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு- மண்ணோடு மண்ணான கிராமங்கள்

Estimated read time 1 min read

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு திடீரென ஏற்பட்டது.

இந்தியாவின் வடமாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, ஹரித்வாரில் உள்ள கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு திடீரென ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. தராலி என்ற கிராமமே இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணானது.

இதேபோல் உத்தராகண்ட் மாநிலம் நைனா என்ற கிராமத்தில் ஹனுமான் கோயில் அருகே பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டது. திகிலூட்டும் வகையிலான மண்சரிவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மண்சரிவில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் – உத்தரகாசியின் தாராலியில் நடந்த மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநில அரசு நிலைமையைக் கண்காணித்து வரும் நிலையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தார். மேலும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. மக்களுக்கு உதவி வழங்குவதில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author