தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்குப் பிறகு இங்கு தான் தசரா விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செப்டம்பர் 23, செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 23, திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம், புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று அதிகாலை கோவிலின் கொடிப்பட்டம் ஊர்வலமாக வீதிகளில் அழைத்து வரப்படும். காலை 6 மணிக்கு கோவிலின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், பூசாரியிடம் இருந்து மஞ்சள் கயிற்றால் ஆன “காப்பு” அணிந்து கொள்வார்கள். இந்த காப்புகளை கோவிலிலிருந்து பெறும் பக்தர்கள், தங்களது ஊர்களில் உள்ள பிற விரததாரிகளுக்கும் விநியோகிக்கின்றனர்.
விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பல்வேறு தேவதை வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை திரட்டுவர். இந்த காணிக்கைகளை 10-ம் நாளன்று கோவிலில் செலுத்துவார்கள். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலை, மதியம், மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
இரவு 10 மணியளவில் அம்மன், வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். முதல் நாளில் அம்மன் சிம்ம வாகனம் துர்க்கை வேடத்தில் அவதரிப்பார். இதைத்தொடர்ந்து
2 கற்பகவிருட்சம் விசுவகர்மேசுவரர்
3 ரிஷபம் பார்வதி
4 மயில் பாலசுப்பிரமணியர்
5 காமதேனு நவநீத கிருஷ்ணர்
6 சிம்மம் மகிஷாசுரமர்த்தினி
7 பூஞ்சப்பரம் ஆனந்த நடராஜர்
8 கமலம் கஜலட்சுமி
9 அன்ன வாகனம் கலைமகள்
முக்கிய நிகழ்வுகள்:
மேலும் 10ம் நாள் (அக்.2 – வியாழன்): இரவு 12 மணிக்கு “மகிஷாசுரசம்ஹாரம்” நிகழ்ச்சி மிகை விமரிசையாக நடைபெறும். 11ம் நாள் (அக்.3 – வெள்ளி): மாலை தேர் பவனி நடைபெறும். தேர் கோவிலில் வந்து சேரும் போதே பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12ம் நாள் (அக்.4 – சனி): மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறும்.