சீன மற்றும் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ஹோண்டுரஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ அம்மையாருடன் 12ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார்.


காஸ்ட்ரோ அம்மையாரின் இப்பயணம், சீன-ஹோண்டுரஸ் உறவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. இது சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சீனாவுக்கும் ஹோண்டுரஸுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்படுவது, இரு நாடுகளின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கும். ஹோண்டுரஸுடன் இணைந்து, பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு நல்ல நண்பராகவும் நல்ல கூட்டாளியாகவும் இருக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தாதர்.

You May Also Like

More From Author