14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 9ஆம் நாள் நடத்தியது. இதில் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், 14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிச் சாதனைகள் குறித்து அறிமுகம் செய்தனர்.
இந்த ஆணையத்தின் இயக்குநர் ட்செங் சான்ஜியே கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட முக்கிய திட்டக் குறியீடுகளில், பொருளாதார அதிகரிப்பு, தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன், ஆராய்ச்சி மேம்பாட்டுச் செலவு உள்ளிட்ட குறியீடுகள் மதிப்பீட்டை நிறைவு செய்தன. குடிமக்களின் நகர மயமாக்க விகிதம், சராசரி ஆயுள் காலம், தானியம் மற்றும் எரியாற்றலின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் உள்ளிட்ட 8 குறியீடுகள் மதிப்பீட்டைத் தாண்டியுள்ளன. மேலும், 102 முக்கிய திட்டப்பணிகள் தங்கு தடையின்றி முன்னேற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.